فَرِحِينَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ وَيَسْتَبْشِرُونَ بِٱلَّذِينَ لَمْ يَلْحَقُوا۟ بِهِم مِّنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் தன் அருளால் அவர்களுக்கு கொடுத்ததைக் கொண்டு மகிழ்ச்சியடைந்தவர்களாக (இருப்பார்கள்). (போரில் கொல்லப்பட்டு) தங்களுடன் வந்து சேராமல், தங்களுக்குப் பின்னால் (இவ்வுலகில் உயிரோடு தங்கி) இருப்பவர்களைக் கொண்டு, "அவர்கள் மீது ஒரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று மகிழ்ச்சியடைவார்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் தன் அருளால் அவர்களுக்கு கொடுத்ததினாலும் அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக இருப்பார்கள். இன்னும், தங்களுடன் வந்து சேராமல், தங்களுக்குப் பின்னால் (இவ்வுலகில் உயிரோடு தங்கி) இருப்பவர்களினாலும் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், அதாவது, (அவர்களும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டால்) “அவர்கள் மீது ஒரு பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’’ என்று.
Tamil Translation - Abdulhamid Baqawi170. அல்லாஹ் தன் அருளால் (வீரமரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைகிறார்கள். இன்னும், தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி ‘‘அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'' என்று மகிழ்ச்சியடைகின்றனர்.