caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 151

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:151

سَنُلْقِى فِى قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلرُّعْبَ بِمَآ أَشْرَكُوا۟ بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ سُلْطَٰنًا وَمَأْوَىٰهُمُ ٱلنَّارُ وَبِئْسَ مَثْوَى ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்) எதற்கு ஓர் ஆதாரத்தை இறக்கவில்லையோ அதை அல்லாஹ்விற்கு அவர்கள் இணைவைத்த காரணத்தால் நிராகரிப்பாளர்களுடைய உள்ளங்களில் திகிலை போடுவோம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களின் தங்குமிடம் கெட்டுவிட்டது.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் எதற்கு ஓர் ஆதாரத்தை இறக்கவில்லையோ அதை அல்லாஹ்விற்கு இணையாக்கி வணங்கிய காரணத்தால் அந்த நிராகரிப்பாளர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை போடுவோம். இன்னும், அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.
Tamil Translation - Abdulhamid Baqawi151. நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் அதிசீக்கிரத்தில் நாம் திகிலை உண்டுபண்ணி விடுவோம். ஏனென்றால், அவர்கள் இணைவைப்பதற்கு அல்லாஹ் எவ்வித ஆதாரமும் அவர்களுக்கு அளிக்காதிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்கள். இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். (நரகத்திலும்) அநியாயக்காரர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70