caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 130

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:130

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَأْكُلُوا۟ ٱلرِّبَوٰٓا۟ أَضْعَٰفًا مُّضَٰعَفَةً وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! இரட்டிப்பாக்கப்பட்ட பன்மடங்கு வட்டியைத் தின்னாதீர்கள். நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! (வட்டி வாங்காதீர்கள்! அதிலும் குறிப்பாக) வட்டியை இரட்டிப்பாக்கி பன்மடங்குகளாக (வாங்கி) புசிக்காதீர்கள். (-வட்டிக்கு வட்டி வாங்காதீர்கள்!) இன்னும், நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை (எப்போதும்) அஞ்சுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi130. நம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை (வாங்கி)த் தின்னாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70