لَيْسَ لَكَ مِنَ ٱلْأَمْرِ شَىْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَٰلِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது, அவர்க(ளில் மீதமுள்ளவர்க)ளை அல்லாஹ் மன்னிப்பதற்காக; அல்லது, நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள் என்பதால் அவர்களை அல்லாஹ் தண்டிப்பதற்காக (அல்லாஹ் உங்களுக்கு உதவினான்). (ஆகவே, இவை) எதிலும் (நபியே) உமக்கு அதிகாரம் ஏதும் இல்லை. (இவை அனைத்தும் அல்லாஹ்விற்கும் அவனது அடியார்களுக்கும் இடையில் உள்ளவை ஆகும். அவன் தான் நாடியவர்களுடன் நாடியபடி நடப்பான்.)
Tamil Translation - Omar Sharifஅல்லது, அவர்க(ளில் மீதமுள்ளவர்க)ளை அல்லாஹ் மன்னிப்பதற்காக; அல்லது, நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள் என்பதால் அவர்களை அல்லாஹ் தண்டிப்பதற்காக (அல்லாஹ் உங்களுக்கு உதவினான்). (ஆகவே, இவை) எதிலும் (நபியே) உமக்கு அதிகாரம் ஏதும் இல்லை. (இவை அனைத்தும் அல்லாஹ்விற்கும் அவனது அடியார்களுக்கும் இடையில் உள்ளவை ஆகும். அவன் தான் நாடியவர்களுடன் நாடியபடி நடப்பான்.)
Tamil Translation - Abdulhamid Baqawi128. (நபியே!) இவ்விஷயத்தில் உமக்கு ஓர் அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர் களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்துவிடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம்.