caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 67

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:67

أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا جَعَلْنَا حَرَمًا ءَامِنًا وَيُتَخَطَّفُ ٱلنَّاسُ مِنْ حَوْلِهِمْ أَفَبِٱلْبَٰطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ ٱللَّهِ يَكْفُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-மக்காவை சேர்ந்த இணைவைப்பாளர்கள்) பார்க்கவில்லையா “நிச்சயமாக நாம் பாதுகாப்பு அளிக்கின்ற புனிதத்தலத்தை (அவர்களுக்கு) ஏற்படுத்தினோம். அவர்களைச் சுற்றி மக்கள் (கொலை கொள்ளைகளால்) சூறையாடப்படுகின்றனர்.” அவர்கள் பொய்யை நம்பிக்கை கொள்கின்றனரா? அல்லாஹ்வின் அருளை நிராகரிக்கின்றனரா?
Tamil Translation - Omar Sharif“பாதுகாப்பு அளிக்கின்ற புனிதத்தலத்தை நிச்சயமாக நாம் (அவர்களுக்கு) ஏற்படுத்தினோம்; அவர்களைச் சுற்றி மக்கள் (கொலை கொள்ளையால்) சூறையாடப்படுகிறார்கள்” என்பதை (-மக்காவை சேர்ந்த இணைவைப்பாளர்கள்) பார்க்கவில்லையா? ஆக, அவர்கள் பொய்யை நம்பிக்கை கொள்கின்றனரா? இன்னும், (உண்மையாளனாகிய) அல்லாஹ்வின் அருளை நிராகரிக்கின்றனரா?
Tamil Translation - Abdulhamid Baqawi67. (இந்த மக்காவை) அபயமளிக்கும் புனித இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களைச் சூழவுள்ள மனிதர்கள் (எதிரிகளால்) தாக்கப்படுகின்றனர். இவர்கள் அல்லாஹ்வின் (இந்த) அருட்கொடையை நிராகரித்துவிட்டு பொய்யான தெய்வங்களை நம்பிக்கை கொள்கின்றனரா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70