caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 61

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:61

وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ لَيَقُولُنَّ ٱللَّهُ فَأَنَّىٰ يُؤْفَكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களையும் பூமியையும் யார் படைத்தான்? சூரியனையும் சந்திரனையும் (யார்) வசப்படுத்தினான் என்று அவர்களிடம் நீர் கேட்டால், நிச்சயமாக அவர்கள் “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். ஆக, அவர்கள் எப்படி (தெளிவான உண்மையிலிருந்து) திருப்பப்படுகிறார்கள்.
Tamil Translation - Omar Sharifவானங்களையும் பூமியையும் யார் படைத்தான்? சூரியனையும் சந்திரனையும் (யார் உங்களுக்கு) வசப்படுத்தினான் என்று அவர்களிடம் நீர் கேட்டால், “அல்லாஹ்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். ஆக, அவர்கள் எப்படி (அந்த அல்லாஹ்வை வணங்குவதிலிருந்து சிலைகளை வணங்குவதின் பக்கம்) திருப்பப்படுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi61. (நபியே! நீர் அவர்களை நோக்கி) “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? சூரியனையும் சந்திரனையும் தன் திட்டப்படியே நடக்கும்படி செய்தவன் யார்?'' என்று அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் ‘‘ அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், அவர்கள் (நம்மைவிட்டு) எங்கு வெருண்டோடுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70