وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا فَقَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱرْجُوا۟ ٱلْيَوْمَ ٱلْـَٔاخِرَ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் ‘மத்யன்’ (ஊர் வாசிகளு)க்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் அனுப்பினோம்). அவர் கூறினார்: என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்! மறுமை நாளை ஆதரவு வையுங்கள்! பூமியில் தீயவர்களாக இருந்து வரம்பு மீறி அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ‘மத்யன்’ நகரவாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் அனுப்பினோம்). ஆக, அவர் கூறினார்: என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்! இன்னும், மறுமை நாளை பயந்து கொள்ளுங்கள்! இன்னும், இந்த பூமியில் கெட்டதை செய்கின்ற தீயவர்களாக அளவு கடந்து அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. மத்யன்வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம். அவர் அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். இறுதி நாளை எதிர்பார்த்திருங்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்'' என்று கூறினார்.