وَوَهَبْنَا لَهُۥٓ إِسْحَٰقَ وَيَعْقُوبَ وَجَعَلْنَا فِى ذُرِّيَّتِهِ ٱلنُّبُوَّةَ وَٱلْكِتَٰبَ وَءَاتَيْنَٰهُ أَجْرَهُۥ فِى ٱلدُّنْيَا وَإِنَّهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் வழங்கினோம். இன்னும் அவரது சந்ததிகளில் நாம் நபித்துவத்தையும் வேதங்களையும் ஆக்கினோம். இன்னும் அவருக்கு அவருடைய கூலியை இம்மையில் நாம் கொடுத்தோம். நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் இருப்பார். (அங்கும் அவருக்கு நிறைவான கூலி கிடைக்கும்.)
Tamil Translation - Omar Sharifஇன்னும், நாம் அவருக்கு (மகனாக) இஸ்ஹாக்கையும் (பேரனாக) யஅகூபையும் வழங்கினோம். இன்னும், அவரது சந்ததிகளில் நாம் நபித்துவத்தையும் வேதங்களையும் ஆக்கினோம். இன்னும், அவருக்கு அவருடைய (பொறுமைக்கான) கூலியை இம்மையில் நாம் கொடுத்தோம். நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் இருப்பார். (அங்கும் அவருக்கு நிறைவான கூலி கிடைக்கும்.)
Tamil Translation - Abdulhamid Baqawi27. ஆகவே, அவருக்கு இஸ்ஹாக்கையும், யஅகூபையும் (சந்ததிகளாகக்) கொடுத்து அவருடைய சந்ததிகளுக்கே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் சொந்தமாக்கி, அவருக்கு அவருடைய கூலியை இம்மையிலும் கொடுத்தோம். மறுமையிலோ நிச்சயமாக அவர் நல்லவர்களில்தான் இருப்பார்.