فَٱلْتَقَطَهُۥٓ ءَالُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّا وَحَزَنًا إِنَّ فِرْعَوْنَ وَهَٰمَٰنَ وَجُنُودَهُمَا كَانُوا۟ خَٰطِـِٔينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஃபிர்அவ்னின் குடும்பத்தினர் அவரைக் கண்டெடுத்தனர் முடிவில் அவர் அவர்களுக்கு எதிரியாகவும் கவலையாகவும் ஆகுவதற்காக. நிச்சயமாக ஃபிர்அவ்ன், ஹாமான், இன்னும் அவ்விருவரின் ராணுவங்கள் பாவிகளாகவே இருந்தனர். (ஆகவே, அவர் அவர்களுக்கு எதிரியாகவும் கவலையாகவும் மாறினார்.)
Tamil Translation - Omar Sharifஆக, ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் அவரைக் கண்டெடுத்தனர். முடிவில் அவர் அவர்களுக்கு எதிரியாகவும் கவலையாகவும் ஆகுவதற்காக இவ்வாறு நிகழ்ந்தது. நிச்சயமாக ஃபிர்அவ்ன், ஹாமான், இன்னும் அவ்விருவரின் ராணுவங்கள் (குற்றம் புரிகின்ற) பாவிகளாக இருந்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. (ஆகவே, மூஸாவுடைய தாய் அவரை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டு விட்டாள்.) அக்குழந்தையை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டனர். அவர் நிச்சயமாக (அவர்களுக்கு) எதிரியாகி துக்கத்தைத் தருவார். ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் தவறிழைத்தவர்களாகவே ஆயினர்.