وَمِن رَّحْمَتِهِۦ جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ لِتَسْكُنُوا۟ فِيهِ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் தனது கருணையினால் உங்களுக்கு இரவை, -அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும்- பகலை, -(அதில்) அவனுடைய அருளை நீங்கள் தேடுவதற்காகவும் நீங்கள் (இந்த அருட்கொடைகளுக்காக அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும்- ஆக்கினான்.
Tamil Translation - Omar Sharifஅவன் தனது கருணையினால் உங்களுக்கு இரவை, - அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும்; பகலை, -(அதில் உங்கள் வாழ்வாதாரமாக இருக்கின்ற) அவனுடைய அருளை நீங்கள் தேடுவதற்காகவும்; நீங்கள் (இந்த அருட்கொடைகளுக்காக அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் - ஆக்கினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi73. (அவ்வாறின்றி) நீங்கள் இளைப்பாறுவதற்கு இரவையும் (பல இடங்களுக்குச் சென்று வாழ்க்கைக்குத் தேவையான) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்ளும் பொருட்டு பகலையும் உங்களுக்கு அவன் ஏற்படுத்தி இருப்பதற்கு அவனுடைய அருள்தான் காரணம். இதற்கு நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!