وَهُوَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ لَهُ ٱلْحَمْدُ فِى ٱلْأُولَىٰ وَٱلْـَٔاخِرَةِ وَلَهُ ٱلْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. இவ்வுலகிலும் மறுமையிலும் அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. தீர்ப்பளிப்பது அவனுக்கே (உரிமையானது)! அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. இவ்வுலகிலும் மறுமையிலும் அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. இன்னும், தீர்ப்பளித்தல் அவனுக்கே உரிமையானது! இன்னும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi70. அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லவே இல்லை. இம்மையிலும், மறுமையிலும் புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன! (மறுமையில் தீர்ப்பு கூறும்) அதிகாரமும் அவனுக்கே உரியது! ஆதலால், (மறுமையில்) நீங்கள் (அனைவரும்) அவனிடமே கொண்டுவரப்படுவீர்கள்.