وَيَوْمَ نَحْشُرُ مِن كُلِّ أُمَّةٍ فَوْجًا مِّمَّن يُكَذِّبُ بِـَٔايَٰتِنَا فَهُمْ يُوزَعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பிக்கின்றவர்களின் கூட்டத்தை நாம் (மறுமையில்) எழுப்புகின்ற நாளில், ஆக, அவர்க(ளில் முன்னோரும் பின்னோரும் ஒன்று சேருவதற்காக அவர்க)ள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பிக்கின்றவர்களின் கூட்டத்தை நாம் (மறுமையில்) எழுப்புகிற நாளை நினைவு கூர்வீராக! ஆக, அவர்க(ளில் முன்னோரும் பின்னோரும் ஒன்று சேருவதற்காக அவர்க)ள் (மஹ்ஷர் மைதானத்தில்) தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi83. ஒவ்வொரு சமுதாயத்திலும் நமது வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை (தனித்தனி) கூட்டமாக (பிரித்து) நாம் (அவர்களை) ஒன்றுதிரட்டும் நாளை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. ஆகவே, அவர்கள் (அப்போது விசாரனைக்காக) நிறுத்தி வைக்கப்படுவார்கள்.