فَلَمَّا جَآءَهَا نُودِىَ أَنۢ بُورِكَ مَن فِى ٱلنَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் அதனிடம் வந்தபோது, நெருப்பில் (-ஒளியில்) இருப்பவன் பரிசுத்தமானவன். இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும் (பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்) என்று (நற்செய்தி கூறி) அழைக்கப்பட்டார். அகிலங்களின் இறைவன் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர் அதனிடம் வந்தபோது, அவர் அழைக்கப்பட்டு “நெருப்பில் (-ஒளியில்) இருப்பவனும் இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும் புனிதமானவர்கள் என்று நற்செய்தி கூறப்பட்டார். அகிலங்களின் இறைவன் அல்லாஹ் (எல்லா குறைகளை விட்டு) மிக்க பரிசுத்தமானவன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi8. அவர் அதன் சமீபமாக வந்த சமயத்தில் ‘‘ நெருப்பில் இருக்கின்ற (வான)வர் மீதும் அதன் சமீபமாக இருக்கின்றவர் (மூஸா) மீதும் பெரும் பாக்கியமளிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்'' என்று சப்தமிட்டுக் கூறப்பட்டது.