بَلِ ٱدَّٰرَكَ عِلْمُهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ بَلْ هُمْ فِى شَكٍّ مِّنْهَا بَلْ هُم مِّنْهَا عَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது, அவர்களது அறிவு மறுமை விஷயத்தில் மறைந்து விட்டதா? (அவர்கள் தங்கள் அறிவால் மறுமையை புரிய முடியாமல் ஆகிவிட்டனரா?) மாறாக, அவர்கள் அதில் (-மறுமை விஷயத்தில்) சந்தேகத்தில் இருக்கின்றனர். மாறாக, அவர்கள் அதில் (-மறுமை விஷயத்தில்) குருடர்கள் ஆவர். (குருடனால் ஒரு பொருளை பார்க்க முடியாதது போல் அவர்களால் மறுமையை அறிந்துகொள்ள முடியாது.)
Tamil Translation - Omar Sharifஅது மட்டுமா, அவர்களது அறிவு மறுமை விஷயத்தில் மறைந்து விட்டதா? (அவர்கள் தங்கள் அறிவால் மறுமையை புரிய முடியாமல் ஆகிவிட்டனரா?) மாறாக, அவர்கள் அ(ந்த மறுமை விஷயத்)தில் சந்தேகத்தில் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் அ(ந்த மறுமை விஷயத்)தில் குருடர்கள் ஆவர். (குருடனால் ஒரு பொருளை பார்க்க முடியாதது போல் அவர்களால் மறுமையை அறிய முடியாமல் இருக்கிறார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi66. எனினும், மறுமையைப் பற்றிய இவர்களுடைய ஞானம் முற்றிலும் சூனியமாகி விட்டது. மாறாக, (அவ்விஷயத்தில்) அவர்கள் பெரும் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். அதுமட்டுமா? அவர்கள் (அறிந்திருந்தும்) அதைப் புரியாத குருடர்களாகி விட்டனர்.