caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 46

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:46

قَالَ يَٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُونَ بِٱلسَّيِّئَةِ قَبْلَ ٱلْحَسَنَةِ لَوْلَا تَسْتَغْفِرُونَ ٱللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் (ஸாலிஹ்) கூறினார்: என் மக்களே! நன்மைக்கு (இறைவனின் அருளுக்கு) முன்னதாக தீமையை (தண்டனையை) ஏன் அவசரப்படுகிறீர்கள்? அல்லாஹ்விடம் நீங்கள் (எல்லோரும்) பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா? நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்.
Tamil Translation - Omar Sharif(ஸாலிஹ்) கூறினார்: “என் மக்களே! (இறைவனின் அருளாகிய) நன்மைக்கு முன்னதாக (அவனின் தண்டனையாகிய) தீமையை ஏன் அவசரப்படுகிறீர்கள்? நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அல்லாஹ்விடம் நீங்கள் (எல்லோரும்) பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா?”
Tamil Translation - Abdulhamid Baqawi46. (அதற்கு ஸாலிஹ்) ‘‘ என் மக்களே! நீங்கள் ஏன் அவசரப்பட்டு நன்மைக்கு முன்னதாகவே தண்டனையைத் தேடிக்கொள்கிறீர்கள்? அல்லாஹ்விடத்தில் நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டாமா? நீங்கள் கருணை செய்யப்படுவீர்களே!'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70