caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shu'araa அத்தியாயம், வசனம் 49

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 47 · 26:49

قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَٰفٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் (-ஃபிர்அவ்ன்) கூறினான்: அவரை (அவர் கொண்டு வந்த மார்க்கம் உண்மை என்று) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா - நான் உங்களுக்கு (அது பற்றி) அனுமதி தருவதற்கு முன்? நிச்சயமாக அவர் (-மூஸா) உங்களுக்கு சூனியத்தை கற்பித்த உங்கள் மூத்தவர் ஆவார். ஆகவே, நீங்கள் (நான் உங்களை தண்டிக்கும் போது உங்கள் தவறை) விரைவில் அறிவீர்கள். திட்டமாக நான் உங்கள் கைகளை உங்கள் கால்களை மாறுகை மாறுகால் வெட்டுவேன். (பிறகு,) உங்கள் அனைவரையும் கழுவேற்றுவேன்.
Tamil Translation - Omar Sharif(ஃபிர்அவ்ன்) கூறினான்: “அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா - நான் உங்களுக்கு (அது பற்றி) அனுமதி தருவதற்கு முன்? நிச்சயமாக அவர் உங்களுக்கு சூனியத்தை கற்பித்த உங்கள் பெரிய (தலை)வர் ஆவார். ஆகவே, நீங்கள் (நான் உங்களை தண்டிக்கும்போது உங்கள் தவறை) விரைவில் அறிவீர்கள். திட்டமாக நான் உங்கள் கைகளை, உங்கள் கால்களை மாறுகை மாறுகால் வெட்டுவேன். இன்னும், உங்கள் அனைவரையும் கழுமரத்தில் ஏற்றுவேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi49. அதற்கு (ஃபிர்அவ்ன்), ‘‘ நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சூனியம் கற்றுக்கொடுத்த உங்கள் குரு அவர்தான். (இதன் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70