caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shu'araa அத்தியாயம், வசனம் 28

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 47 · 26:28

قَالَ رَبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَآ إِن كُنتُمْ تَعْقِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கூறினார்: (நீங்கள் யாரை வணங்க வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேனோ அவன்தான் சூரியன் உதிக்கும்) கிழக்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளுக்கும்) இன்னும் (சூரியன் மறைகின்ற) மேற்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளுக்கும்) இன்னும் (நாடுகளில்) அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருந்தால் (இதை புரிவீர்கள். எனவே சிந்தியுங்கள்!)
Tamil Translation - Omar Sharif(மூஸா) கூறினார்: (நீங்கள் யாரை வணங்க வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேனோ அவன்தான் சூரியன் உதிக்கும்) கிழக்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளு)க்கும், (சூரியன் மறைகிற) மேற்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளு)க்கும் இன்னும் (நாடுகளில்) அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான், நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருந்தால் (இதை புரிந்து கொள்வீர்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi28. அதற்கு (மூஸா) ‘‘ கீழ் நாடு மேல் நாடு இன்னும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களின் இறைவனும் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70