caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shu'araa அத்தியாயம், வசனம் 24

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 47 · 26:24

قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ إِن كُنتُم مُّوقِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூஸா கூறினார்: வானங்கள் இன்னும் பூமி இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன்தான் (அகிலங்களின் இறைவன்) நீங்கள் உறுதி கொள்பவர்களாக இருந்தால் (நீங்கள் பார்க்கும் அனைத்து படைப்புகளுக்கும் அவன்தான் இறைவன் என்பதையும் உறுதி கொள்ளுங்கள்).
Tamil Translation - Omar Sharif(மூஸா) கூறினார்: வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன்தான் அகிலங்களின் இறைவன் ஆவான். நீங்கள் (கண்ணால் பார்ப்பதை) உறுதியாக நம்பக்கூடியவர்களாக இருந்தால் (அதுபோன்றே படைப்பாளன் அல்லாஹ்தான். அவனே வணங்கத் தகுதியானவன் என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi24. அதற்கு (மூஸா) ‘‘ வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன்தான் (உலகத்தாரின் இறைவனும் ஆவான்). (இவ்வுண்மையை) நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நம்பிக்கை கொள்ளுங்கள்)'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70