caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shu'araa அத்தியாயம், வசனம் 227

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 47 · 26:227

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُوا۟ ٱللَّهَ كَثِيرًا وَٱنتَصَرُوا۟ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ وَسَيَعْلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَىَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(எனினும்,) எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் (அல்லாஹ்வின் எதிரிகளிடம்) பழிவாங்கினார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் பழிப்புக்கு உரியவர்கள் அல்லர்.) (இணைவைத்து) அநியாயம் செய்தவர்கள் தாங்கள் எந்த திரும்பும் இடத்திற்கு திரும்புவார்கள் என்பதை விரைவில் அறிவார்கள்.
Tamil Translation - Omar Sharif(எனினும்,) எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் (அல்லாஹ்வின் எதிரிகளிடம்) பழிவாங்கினார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் பழிப்புக்கு உரியவர்கள் அல்லர்.) (இணைவைத்து) அநியாயம் செய்தவர்கள் தாங்கள் எந்த திரும்பும் இடத்திற்கு திரும்புவார்கள் என்பதை விரைவில் அறிவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi227. (ஆயினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் மூலம்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தான். பிறரை துன்புறுத்திய) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70