إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلًا صَٰلِحًا فَأُو۟لَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمْ حَسَنَٰتٍ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎனினும், யார் திருந்தி, நம்பிக்கை கொண்டு, நன்மையான செயலை செய்வார்களோ அவர்கள், அவர்களுடைய தீய செயல்களை நல்ல செயல்களாக அல்லாஹ் மாற்றி விடுவான். (இஸ்லாமில் நுழைவதற்கு முன்பு அவர்கள் செய்த தீமையான காரியங்களுக்குப் பதிலாக நன்மைகளை அவன் அவர்களுக்கு மாற்றி விடுகிறான். முன்னர் பாவத்தில் செலவு செய்தனர். இப்போது நன்மையில் செலவு செய்வார்கள். முன்பு இணைவைத்தனர். இப்போது ஏக இறைவனை மட்டும் வணங்குகின்றனர். முன்னர் இஸ்லாமிற்கு எதிராக சண்டை யிட்டனர். இப்போது இஸ்லாமிற்காக சண்டையிடுகின்றனர்.) அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஎனினும், எவர்கள் (பாவங்களை விட்டு) திருந்தி (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோரி, நம்பிக்கைக் கொண்டு, நன்மையான செயலை செய்வார்களோ அவர்களுடைய தீய செயல்களை நல்ல செயல்களாக அல்லாஹ் மாற்றி விடுவான். (இஸ்லாமில் நுழைவதற்கு முன்பு அவர்கள் செய்த தீமையான காரியங்களுக்குப் பதிலாக நன்மைகளை அவர்கள் செய்யும்படி அவன் அவர்களை மாற்றி விடுகிறான்.) அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi70. ஆயினும், (அவர்களில்) எவர்கள் பாவத்திலிருந்து விலகி (மன்னிப்புக் கோரி) நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அத்தகையவர்கள் (முன்னர் செய்துவிட்ட) பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல; அவற்றை) நன்மைகளாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மகா கருணையுடையவனாகவும் இருக்கிறான்.