وَٱلَّذِينَ لَا يَدْعُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ وَلَا يَقْتُلُونَ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைக்க மாட்டார்கள் (வணங்க மாட்டார்கள்), அல்லாஹ் (கொல்லக்கூடாது என்று) தடுத்த உயிரை கொல்ல மாட்டார்கள் (அதற்குரிய) உரிமையைக் கொண்டே தவிர. விபசாரம் செய்யமாட்டார்கள். யார் இவற்றை செய்வாரோ அவர் தண்டனையை சந்திப்பார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைக்க மாட்டார்கள் (-வணங்க மாட்டார்கள்), (கொல்லக்கூடாது என்று) அல்லாஹ் தடுத்த உயிரை கொல்ல மாட்டார்கள் (அதற்குரிய) உரிமை இருந்தாலே தவிர. இன்னும், விபச்சாரம் செய்யமாட்டார்கள். யார் இவற்றை செய்வாரோ அவர் (மறுமையில்) தண்டனையை சந்திப்பார்.
Tamil Translation - Abdulhamid Baqawi68. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைக்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். ஆகவே, எவனேனும் இத்தகைய தீய காரியங்களைச் செய்ய முற்பட்டால், அவன் (அதற்குரிய) தண்டனையை அடைய வேண்டியதுதான்.