caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Furqaan அத்தியாயம், வசனம் 55

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 42 · 25:55

وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ وَكَانَ ٱلْكَافِرُ عَلَىٰ رَبِّهِۦ ظَهِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு நற்பலனளிக்காத இன்னும் அவர்களுக்கு தீங்கிழைக்காதவற்றை வணங்குகின்றனர். நிராகரிப்பாளன் தன் இறைவனுக்கு எதிராக (ஷைத்தானை) ஆதரிக்கக்கூடியவனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் அல்லாஹ்வை அன்றி (- அவனை வணங்காமல்) தங்களுக்கு எதையும் பலனளிக்காததை, இன்னும், தங்களுக்கு எதையும் தீங்கிழைக்காததை வணங்குகிறார்கள். இன்னும், நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (ஷைத்தானை) ஆதரிக்கக் கூடியவனாக (சிலைகளுக்கு உதவக்கூடியவனாக) இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi55. இவ்வாறிருந்தும் அவர்களோ தங்களுக்கு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்றதை அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றனர். நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கு விரோதமானவர்களாக இருக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70