وَهُوَ ٱلَّذِى مَرَجَ ٱلْبَحْرَيْنِ هَٰذَا عَذْبٌ فُرَاتٌ وَهَٰذَا مِلْحٌ أُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَحِجْرًا مَّحْجُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் இரு கடல்களை இணைத்தான். இது மிக்க மதுரமான இனிப்பு நீராகும். இதுவோ மிக்க உவர்ப்பான உப்பு நீராகும். அவ்விரண்டுக்கும் இடையில் ஒரு திரையையும் முற்றிலும் தடுக்கக்கூடிய தடுப்பையும் அவன் ஆக்கினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன்தான் இரு கடல்களை இணைத்தான். இது மிக்க மதுரமான இனிப்பு நீராகும். இதுவோ மிக்க உவர்ப்பான உப்பு நீராகும். இன்னும், அவ்விரண்டுக்கும் இடையில் ஒரு திரையையும் (அவ்விரண்டும் சேர்ந்து விடுவதை) முற்றிலும் தடுக்கக்கூடிய ஒரு தடுப்பையும் அவன் ஆக்கினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi53. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்திருக்கிறான். ஒன்று, மிக்க இன்பமும் மதுரமுமான தண்ணீர். மற்றொன்று, உப்பும் கசப்புமான தண்ணீர். (இவை ஒன்றோடொன்று கலந்து விடாதிருக்கும் பொருட்டு) இவ்விரண்டுக்கும் இடையில் திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தி இருக்கிறான்.