وَلَقَدْ صَرَّفْنَٰهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوا۟ فَأَبَىٰٓ أَكْثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதை (-அந்த மழையை) அவர்களுக்கு மத்தியில் நாம் பிரித்துக் கொடுத்தோம் (பரவலாக பல இடங்களில் பொழிய வைத்தோம்.) அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக ஆனால், மனிதர்களில் மிக அதிகமானவர்கள் நிராகரிப்பதைத் தவிர (நம்பிக்கை கொள்ள) மறுத்து விட்டனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அதை (-அந்த மழையை) அவர்களுக்கு மத்தியில் நாம் பிரித்(து பரவலாக பல இடங்களில் பொழிய வைத்)தோம், அவர்கள் (அதன் மூலம் என் அருளை சிந்தித்து) நல்லறிவு பெறுவதற்காக. ஆனால், மனிதர்களில் அதிகமானவர்கள் நிராகரிப்பதைத் தவிர (நன்றி செலுத்த) மறுத்து விட்டனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi50. அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இவ்விஷயத்தைப் பலவாறாக அவர்களுக்கு எடுத்துரைத்தோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் மிக்க நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர்.