caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Furqaan அத்தியாயம், வசனம் 37

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 42 · 25:37

وَقَوْمَ نُوحٍ لَّمَّا كَذَّبُوا۟ ٱلرُّسُلَ أَغْرَقْنَٰهُمْ وَجَعَلْنَٰهُمْ لِلنَّاسِ ءَايَةً وَأَعْتَدْنَا لِلظَّٰلِمِينَ عَذَابًا أَلِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் நூஹ் உடைய மக்களையும் அவர்கள் தூதர்களை பொய்ப்பித்த போது அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இன்னும் அநியாயக்காரர்களுக்கு வலி தரும் தண்டனையை நாம் தயார்படுத்தியுள்ளோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நூஹ் உடைய மக்களை, அவர்கள் (நமது) தூதர்களை பொய்ப்பித்தபோது அவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். இன்னும், அவர்களை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இன்னும், வலி தரும் தண்டனையை அநியாயக்காரர்களுக்கு நாம் தயார்படுத்தி இருக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi37. நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய சமயத்தில் அவர்களையும் மூழ்கடித்து, அவர்களை மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இத்தகைய அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70