ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُن لَّهُۥ شَرِيكٌ فِى ٱلْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَىْءٍ فَقَدَّرَهُۥ تَقْدِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கே வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி உரியது. அவன் (தனக்கு) குழந்தையை எடுத்துக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுக்கு இணை ஒருவரும் இல்லை. எல்லாவற்றையும் அவன் படைத்தான். அவற்றை சீராக நிர்ணயித்தான். (ஒவ்வொன்றுக்கும் தகுதியானதை ஏற்படுத்தினான்.)
Tamil Translation - Omar Sharifவானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன் (தனக்கு) குழந்தையை (-சந்ததியை) ஏற்படுத்தவில்லை. இன்னும், ஆட்சியில் அவனுக்கு இணை ஒருவரும் இல்லை. இன்னும், எல்லாவற்றையும் அவனே படைத்தான். அதுமட்டுமல்ல, அவற்றை (எப்படி படைக்க வேண்டுமோ அப்படி) சீராக நிர்ணயம் செய்(து, அவற்றை படைத்)தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. (இவ்வேதத்தை அருளியவன் எத்தகையவனென்றால்,) வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவன் ஒரு சந்ததியை எடுத்துக் கொள்ளவும் இல்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு ஒரு துணையுமில்லை. அவனே அனைத்தையும் படைத்து அவற்றுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன்.