تَبَارَكَ ٱلَّذِىٓ إِن شَآءَ جَعَلَ لَكَ خَيْرًا مِّن ذَٰلِكَ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ وَيَجْعَل لَّكَ قُصُورًۢا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் (-அல்லாஹ்) அருள் நிறைந்தவன். அவன் நாடினால் உமக்கு இவற்றைவிட சிறந்ததை - அவற்றை சுற்றி நதிகள் ஓடும் சொர்க்கங்களை- ஏற்படுத்துவான். இன்னும் உமக்கு (அங்கு) மாளிகைகளை ஏற்படுத்துவான்.
Tamil Translation - Omar Sharifஅவன் (-அல்லாஹ்) மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான். அவன் நாடினால் உமக்கு இவற்றைவிட சிறந்ததை - அவற்றை சுற்றி நதிகள் ஓடும் சொர்க்கங்களை- ஏற்படுத்துவான். இன்னும், உமக்கு (அங்கு) மாளிகைகளை ஏற்படுத்துவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. (நபியே! உமது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) இவற்றைச் சொந்தமாக்கி மிக்க மேலான சொர்க்கங்களை உமக்குத் தரக்கூடியவன். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உமக்குப் பல மாட மாளிகைகளையும் அமைத்து விடுவான்.