إِنَّمَا كَانَ قَوْلَ ٱلْمُؤْمِنِينَ إِذَا دُعُوٓا۟ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا۟ سَمِعْنَا وَأَطَعْنَا وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களுடைய கூற்றாக இருப்பதெல்லாம், அவர்கள் அல்லாஹ் இன்னும் அவனது தூதர் பக்கம் அழைக்கப்பட்டால் - அவர் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பதற்காக - நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்று அவர்கள் கூறுவதுதான். அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவர்.
Tamil Translation - Omar Sharifஅவர்களுக்கு மத்தியில் தூதர் தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ் இன்னும் அவனது தூதர் பக்கம் நம்பிக்கையாளர்கள் அழைக்கப்பட்டால் அப்போது அந்த நம்பிக்கையாளர்களுடைய கூற்றாக இருப்பதெல்லாம், நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்று அவர்கள் கூறுவதுதான். இன்னும், அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவர்.
Tamil Translation - Abdulhamid Baqawi51. எனினும், மெய்யாகவே நம்பிக்கை கொண்டவர்களோ அவர்களுக்கு இடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றித்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால், அதற்கவர்கள் ‘‘நாங்கள் செவி சாய்த்தோம்; நாங்கள் கீழ்ப்படிந்தோம்'' என்று கூறுவதைத் தவிர, வேறு ஒன்றும் கூறுவதில்லை. இவர்கள்தான் முற்றிலும் வெற்றி அடைந்தவர்கள் ஆவர்.