caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muminoon அத்தியாயம், வசனம் 80

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 74 · 23:80

وَهُوَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ وَلَهُ ٱخْتِلَٰفُ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ أَفَلَا تَعْقِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் உயிர் கொடுக்கின்றான்; இன்னும் மரணத்தை தருகிறான். இரவு பகல் மாறிமாறி வருவதும் அவனுடையதுதான். (-அவன்தான் இரவு பகலை மாறிமாறி வரச் செய்கின்றான்.) நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன்தான் உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்க வைக்கிறான். இன்னும், இரவு பகல் மாறிமாறி வருவதும் அவனுடைய செயல்தான். ஆக, நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi80. அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70