caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muminoon அத்தியாயம், வசனம் 41

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 74 · 23:41

فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ بِٱلْحَقِّ فَجَعَلْنَٰهُمْ غُثَآءً فَبُعْدًا لِّلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉண்மையில் அவர்களை பெரிய சப்தம் பிடித்துக் கொண்டது. அவர்களை (எதற்கும் பயனற்ற) நுரைகளாக (அதைப் போன்று) மாற்றி விடுவோம். அநியாயக்கார கூட்டம் தொலைந்து போகட்டும்.
Tamil Translation - Omar Sharifஆக, உண்மையில் அவர்களை கடுமையான சத்தம் பிடித்துக் கொண்டது. ஆகவே, அவர்களை (எதற்கும் பயனற்ற) நுரைகளாக (அதைப் போன்று) மாற்றி விட்டோம். ஆக, அநியாயக்கார கூட்டம் அழிந்துபோகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi41. ஆகவே (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் மெய்யாகவே அவர்களைப் பிடித்துக் கொண்டது. நாம் அவர்களை (அழித்துக்) குப்பைக் கூளங்களைப் போல் ஆக்கிவிட்டோம். ஆகவே, அநியாயக்கார மக்கள் மீது (இறைவனின்) சாபம் ஏற்பட்டுவிட்டது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70