ثُمَّ خَلَقْنَا ٱلنُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا ٱلْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا ٱلْمُضْغَةَ عِظَٰمًا فَكَسَوْنَا ٱلْعِظَٰمَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَٰهُ خَلْقًا ءَاخَرَ فَتَبَارَكَ ٱللَّهُ أَحْسَنُ ٱلْخَٰلِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு இந்திரியத் துளியை ஒரு இரத்தக் கட்டியாக (-கருவாக) நாம் படைத்தோம். இரத்தக் கட்டியை ஒரு சதைத் துண்டாக நாம் படைத்தோம். சதைத் துண்டை எலும்புகளாக நாம் படைத்தோம். எலும்புகளுக்கு சதையை அணிவித்தோம். பிறகு அவனை (உயிர் ஊதி அதன்மூலம்) வேறு ஒரு (புதிய) படைப்பாக நாம் படைத்தோம். செய்பவர்களில் மிக அழகியவனாகிய அல்லாஹ் மிக்க அருள் வளம் நிறைந்து விட்டான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அந்த இந்திரியத் துளியை ஓர் இரத்தக் கட்டியாக (-கருவாக) நாம் ஆக்கினோம். ஆக, அந்த இரத்தக் கட்டியை ஒரு சதைத் துண்டாக நாம் ஆக்கினோம். ஆக, அந்த சதைத் துண்டை எலும்புகளாக நாம் ஆக்கினோம். ஆக, அந்த எலும்புகளுக்கு சதையை அணிவித்தோம். பிறகு அவனை (உயிர் ஊதி அதன் மூலம்) வேறு ஒரு (புதிய) படைப்பாக நாம் உருவாக்கினோம். (பொருள்களை) செய்பவர்களில் மிக அழகிய (முறையில்) செய்பவனாகிய அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதை வேறு ஒரு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன்.