فَتَعَٰلَى ٱللَّهُ ٱلْمَلِكُ ٱلْحَقُّ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْكَرِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅரசனாகிய, உண்மையாளனாகிய, கண்ணியமிக்க அர்ஷுடைய அதிபதியாகிய அல்லாஹ் (இவர்களின் தீய வர்ணிப்பை விட்டும்) மிக உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை.
Tamil Translation - Omar Sharifஆக, அரசனாகிய, உண்மையான இறைவனாகிய, கண்ணியமிக்க அர்ஷுடைய அதிபதியாகிய அல்லாஹ் (இவர்களின் இழிவான வர்ணிப்பை விட்டும்) மிக உயர்ந்தவனாக இருக்கிறான். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi116. ஆகவே, மெய்யான அரசனாகிய அல்லாஹ் மிக்க உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை. கண்ணியமிக்க அர்ஷுக்குச் சொந்தக்காரன் அவனே!