caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 77

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:77

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱرْكَعُوا۟ وَٱسْجُدُوا۟ وَٱعْبُدُوا۟ رَبَّكُمْ وَٱفْعَلُوا۟ ٱلْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! குனியுங்கள்! சிரம்பணியுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மை செய்யுங்கள். நீங்கள் (அவற்றின் மூலம்) வெற்றி அடைவதற்காக.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! (தொழுகையில்) குனியுங்கள்! இன்னும், சிரம்பணியுங்கள்! இன்னும், உங்கள் இறைவனை வணங்குங்கள்! இன்னும், நன்மை செய்யுங்கள்! நீங்கள் (அவற்றின் மூலம்) வெற்றி அடைவதற்காக.
Tamil Translation - Abdulhamid Baqawi77. நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். (மார்க்கத்திற்கும் மக்களுக்கும்) நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70