caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 67

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:67

لِّكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا هُمْ نَاسِكُوهُ فَلَا يُنَٰزِعُنَّكَ فِى ٱلْأَمْرِ وَٱدْعُ إِلَىٰ رَبِّكَ إِنَّكَ لَعَلَىٰ هُدًى مُّسْتَقِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வொரு சமுதாயத்திற்கும் நாம் ஒரு பலியை (பிராணிகளை அறுக்கின்ற முறையை) ஏற்படுத்தினோம். அவர்கள் அதை (அதன்படி) பலியிடுவார்கள். ஆகவே, அவர்கள் உம்மிடம் அந்த விஷயத்தில் (-அறுத்ததை சாப்பிடுவதிலும் இறந்து விட்டதை தவிர்த்து விடுவதிலும்) தர்க்கிக்க வேண்டாம். உமது இறைவனின் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேரான வழிகாட்டுதல் மீது இருக்கின்றீர்.
Tamil Translation - Omar Sharifஒவ்வொரு சமுதாயத்திற்கும் நாம் (கால்நடைகளை அறுத்து) பலியிடுவதை ஏற்படுத்தினோம். அவர்கள் அதை பலியிடுவார்கள். ஆகவே, (நபியே!) அவர்கள் உம்மிடம் இந்த விஷயத்தில் (-அறுக்கப்பட்ட பிராணியை சாப்பிடுவதிலும் தானாக செத்த பிராணியை தவிர்த்து விடுவதிலும்) தர்க்கம் செய்ய வேண்டாம். இன்னும், (நபியே!) இறைவனின் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேரான (மிகச் சரியான) வழிகாட்டுதல் மீது இருக்கிறீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi67. (நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு) அவர்கள் என்னை வணங்குவதற்குரிய வழியை நாம் ஏற்படுத்தி இருந்தோம். ஆகவே, (உமது காலத்தில் உமக்கு) நாம் ஏற்படுத்தியிருக்கும் வழியைப் பற்றி அவர்கள் உம்முடன் தர்க்கம் செய்ய வேண்டாம். மேலும் நீர் அவர்களை உமது இறைவன் (ஏற்படுத்திய வழியின்) பக்கம் அழைப்பீராக. நிச்சயமாக நீர் நேரான வழியில்தான் இருக்கிறீர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70