caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 41

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:41

ٱلَّذِينَ إِن مَّكَّنَّٰهُمْ فِى ٱلْأَرْضِ أَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ وَأَمَرُوا۟ بِٱلْمَعْرُوفِ وَنَهَوْا۟ عَنِ ٱلْمُنكَرِ وَلِلَّهِ عَٰقِبَةُ ٱلْأُمُورِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்வின் பாதையில் போர்புரிகின்ற) அவர்களுக்கு பூமியில் நாம் இடமளித்தால் (-அதிகாரமளித்தால்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்; (தங்களது செல்வங்களுக்கு உரிய) ஸகாத்தைக் கொடுப்பார்கள்; நன்மையை (தவ்ஹீதை) ஏவுவார்கள்; தீமையிலிருந்து (ஷிர்க்கிலிருந்து) தடுப்பார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்வின் பக்கமே!
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்வின் பாதையில் போர்புரிகின்ற) அவர்களுக்கு பூமியில் நாம் இடமளித்தால் (-அதிகாரமளித்தால்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்; இன்னும், (தங்களது செல்வங்களுக்கு உரிய) ஸகாத்தைக் கொடுப்பார்கள்; இன்னும், (மக்களுக்கு) நன்மையை (தவ்ஹீதை) ஏவுவார்கள்; இன்னும், தீமையிலிருந்து (-ஷிர்க்கிலிருந்து மக்களை) தடுப்பார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi41. இவர்கள் எத்தகையோர் என்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் வசதியளித்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடை செய்வார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70