إِنَّ ٱللَّهَ يُدْخِلُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகள் செய்தவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் (மரங்களுக்கு) கீழ் நதிகள் ஓடும். அவற்றில் (-அந்த சொர்க்கங்களில்) தங்கத்தினாலான வளையல்களும் முத்து (ஆபரணமு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அவற்றில் அவர்களது ஆடை பட்டாகும்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகள் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் தங்கத்தினாலான வளையல்களும் முத்து (ஆபரணமு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும், அவற்றில் அவர்களது ஆடை பட்டாக இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். (பின்னும்) பொற்கடகமும், முத்து ஆபரணமும் (விருதுகளாக) அவர்களுக்கு அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளோ மிருதுவான பட்டினால் ஆனதாக இருக்கும்.