مَن كَانَ يَظُنُّ أَن لَّن يَنصُرَهُ ٱللَّهُ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ فَلْيَمْدُدْ بِسَبَبٍ إِلَى ٱلسَّمَآءِ ثُمَّ لْيَقْطَعْ فَلْيَنظُرْ هَلْ يُذْهِبَنَّ كَيْدُهُۥ مَا يَغِيظُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionயார் அல்லாஹ் அவருக்கு (-தனது நபிக்கு) இவ்வுலகிலும் மறு உலகிலும் உதவவே மாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றானோ அவன் (வீட்டின்) முகட்டில் ஒரு கயிறை தொங்கவிட்டு பிறகு (அதை) துண்டித்துக் கொள்ளவும் (-தூக்கு போட்டுக் கொள்ளவும்) அவனுடைய சூழ்ச்சி (-தூக்கு போட்டுக் கொள்வது) அவனுக்கு கோபமூட்டுவதை நிச்சயமாக போக்கி விடுகிறதா என்று அவன் பார்க்கட்டும்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ், அவருக்கு (-நபிக்கு) இவ்வுலகிலும் மறு உலகிலும் உதவவே மாட்டான் என்று யார் எண்ணி இருக்கிறானோ அவன் (வீட்டின்) முகட்டில் ஒரு கயிறை தொங்கவிட்டு பிறகு (அதை) துண்டித்து (-தூக்கிட்டு)க் கொள்ளவும். ஆக, (அவனை) எது கோபமூட்டுகிறதோ அதை அவனுடைய (இந்த தூக்கிட்டுக் கொள்ளும்) சூழ்ச்சி நிச்சயமாக போக்கி விடுகிறதா என்று அவன் கவனிக்கட்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. எவன் (நம் தூதர் மீது பொறாமை கொண்டு) அவருக்கு அல்லாஹ் இம்மையிலோ மறுமையிலோ நிச்சயமாக உதவி செய்யமாட்டான் என்று (தன் பொறாமையின் காரணமாக) எண்ணுகிறானோ அவன் (வீட்டின்) முகட்டில் ஒரு கயிற்றைக் கட்டி(ச் சுருக்குப் போட்டு அதில் கழுத்தை மாட்டி) நெரித்துக் கொள்ளட்டும். தான் பொறாமை கொண்ட (அல்லாஹ்வின் உதவியை) தன் சூழ்ச்சி மெய்யாகவே போக்கிவிட்டதா? என்று பார்க்கவும்.