caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 39

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:39

لَوْ يَعْلَمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ حِينَ لَا يَكُفُّونَ عَن وُجُوهِهِمُ ٱلنَّارَ وَلَا عَن ظُهُورِهِمْ وَلَا هُمْ يُنصَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்களது முகங்களை விட்டும் தங்களது முதுகுகளை விட்டும் நரக நெருப்பை தடுக்கமாட்டார்களே, இன்னும் அவர்கள் உதவிசெய்யப்பட மாட்டார்களே (அந்த) நேரத்தை நிராகரிப்பாளர்கள் அறிந்து கொண்டால்... (நிராகரிப்பிலிருந்து விலகி நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.)
Tamil Translation - Omar Sharifநிராகரிப்பாளர்கள் தங்களது முகங்களை விட்டும் தங்களது முதுகுகளை விட்டும் நரக நெருப்பை தடுக்கமாட்டார்களே, இன்னும், அவர்கள் உதவிசெய்யப்பட மாட்டார்களே (அந்த) நேரத்தை அவர்கள் அறிந்து கொண்டால் (அல்லாஹ்வை நிராகரித்திருக்க மாட்டார்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi39. அவர்கள் தங்கள் முகங்களில் இருந்தும், தங்கள் முதுகுகளில் இருந்தும் நரக நெருப்பைத் தட்டிக்கொள்ள முடியாமலும், அவர்களுக்கு உதவி செய்ய ஒருவரும் கிடைக்காமலும் போகக்கூடிய (ஒரு) காலம் வருமென்பதை இந்த நிராகரிப்பவர்கள் அறிந்திருந்தால் (அது இவர்களுக்கே நன்று).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70