caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 36

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:36

وَإِذَا رَءَاكَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِى يَذْكُرُ ءَالِهَتَكُمْ وَهُم بِذِكْرِ ٱلرَّحْمَٰنِ هُمْ كَٰفِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நிராகரிப்பாளர்கள் உம்மைப் பார்த்தால், “இவரா உங்களது கடவுள்களை விமர்சிக்கிறார்” என்று கூறி உம்மை பரிகாசமாகவே தவிர எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அவர்களோ ரஹ்மா(ன் அளவற்ற அருளாளன் என்று இறைவ)னின் பெயரைக் கூறுவதையும் மறுக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நிராகரிப்பாளர்கள் உம்மைப் பார்த்தால், உம்மை கேலியாக தவிர எடுத்துக் கொள்ளமாட்டார்கள். “இவரா உங்கள் கடவுள்களை விமர்ச்சிக்கிறார்” (என்று தங்களுக்குள் பேசுகிறார்கள்.) அவர்களோ (தங்களை படைத்து பரிபாலிக்கின்ற) ரஹ்மானை (நன்றியுடன்) நினைவு கூர மறுக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. (நபியே!) நிராகரிப்பவர்கள் உம்மைக் கண்டால் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் இவர்தானா?'' என்று உம்மை(ச் சுட்டிக் காண்பித்து)ப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை. எனினும், அவர்களோ ரஹ்மா(ன் அளவற்ற அருளாளன் என்று இறைவ)னின் பெயரைக் கூறுவதையும் மறுக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70