caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:3

لَاهِيَةً قُلُوبُهُمْ وَأَسَرُّوا۟ ٱلنَّجْوَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ هَلْ هَٰذَآ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ أَفَتَأْتُونَ ٱلسِّحْرَ وَأَنتُمْ تُبْصِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களது உள்ளங்கள் (அறிவுரையை) அலட்சியம் செய்கின்றன. அநியாயக்காரர்கள் (தங்களுக்கு மத்தியில்) பேச்சை பகிரங்கப்படுத்திக் கொண்டனர். (அதில்) “இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர வேறில்லை. நீங்கள் அறிந்துகொண்டே சூனியத்தை (-இந்தக் குர்ஆனை) ஏற்றுக் கொள்கிறீர்களா?” (என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.)
Tamil Translation - Omar Sharifஅவர்களது உள்ளங்கள் மறதியில் இருக்கின்றன. (இணைவைக்கின்ற) அநியாயக்காரர்கள் (நமது நபியை குறித்து அவர்கள் என்ன சொல்ல வேண்டுமென்று தங்களுக்கு மத்தியில் ஒருமித்து முடிவு செய்த) பேச்சை (வெளியில்) பகிரங்கப்படுத்தி பேசினார்கள். (அதாவது, நபியவர்களை சுட்டிக்காண்பித்து) “இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர வேறில்லை. (மக்களே!) நீங்கள் (இதை) அறிந்துகொண்டே (அவர் ஓதுகிற) சூனியத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?” (என்று வெளிப்படையாக கேட்டனர்.)
Tamil Translation - Abdulhamid Baqawi3. அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச்) சிந்திப்பதே இல்லை. இத்தகைய அநியாயக்காரர்கள் (நம் தூதரைப் பற்றி) ‘‘இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறென்ன? நீங்கள் பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தில் சிக்க வருகிறீர்களா?'' என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70