يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ٱرْتَضَىٰ وَهُم مِّنْ خَشْيَتِهِۦ مُشْفِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு (வானவர்களுக்கு) முன் உள்ளதையும் அவர்களுக்குப் பின் உள்ளதையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) அவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். அவர்கள் அவனுடைய அச்சத்தால் பயப்படுகிறார்கள்.
Tamil Translation - Omar Sharifஅ(ந்த வான)வர்களுக்கு முன் உள்ளதையும் அவர்களுக்குப் பின் உள்ளதையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கே தவிர அவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். இன்னும், அவர்கள் அவனுடைய அச்சத்தால் (அவனுக்கு மாறு செய்யாமல்) மிகுந்த எச்சரிக்கையுடன் பயந்தவர்களாக இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi28. அவர்களுக்கு முன்னிருப்பவற்றையும், பின்னிருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கே தவிர மற்றெவருக்கும் இவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். இன்னும், அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள்.