وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱلرَّحْمَٰنُ وَلَدًا سُبْحَٰنَهُۥ بَلْ عِبَادٌ مُّكْرَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“ரஹ்மான் (தனக்கு) ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகின்றனர். அவன் மகா தூயவன். மாறாக, (அந்த வானவர்கள்) அவனுடைய கண்ணியமான அடியார்கள்.
Tamil Translation - Omar Sharif“ரஹ்மான் (தனக்கு) ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகிறார்கள். அவன் மகா தூயவன். (அந்த வானவர்கள் அவனுடைய மகள்கள் அல்ல.) மாறாக, அவனுடைய கண்ணியமான அடியார்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. (அவ்வாறிருந்தும்) ரஹ்மான் (வானவர்களை தனக்குப் பெண்) சந்ததியாக்கிக் கொண்டான் என்று இவர்கள் கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். (வானவர்கள் அவனுடைய சந்ததிகளன்று,) எனினும், (அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள் ஆவர்.