caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 19

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:19

وَلَهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَنْ عِندَهُۥ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِۦ وَلَا يَسْتَحْسِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அவனுக்கே (உரிமையானவர்கள்). அவனிடம் இருப்பவர்கள் (-வானவர்கள்) அவனை வணங்குவதைவிட்டு பெருமை அடிக்க மாட்டார்கள். இன்னும் சோர்வடைய மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifவானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அவனுக்கே உரிமையானவர்கள். இன்னும், அவனிடம் இருக்கின்ற (வான)வர்கள் அவனை வணங்குவதற்கு வீம்புபிடிக்க மாட்டார்கள். இன்னும் (அதில்) சோர்வடைய மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுக்குரியனவே! அவனிடத்தில் இருக்கக்கூடிய (வானவர்களாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமை அடிக்கவும் மாட்டார்கள், சோர்வுறவும் மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70