قَٰلَ رَبِّ ٱحْكُم بِٱلْحَقِّ وَرَبُّنَا ٱلرَّحْمَٰنُ ٱلْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபி முஹம்மது) கூறினார்: என் இறைவா! சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பாயாக! எங்கள் இறைவனாகிய ரஹ்மானிடம் நீங்கள் (வகை வகையாக பொய்களை) வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுகிறது.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்வின் தூதர்) கூறினார்: என் இறைவா! உண்மையான தீர்ப்பை (எங்களுக்கு) நீ தீர்ப்பாக வழங்குவாயாக! இன்னும், (அவர் மக்களை நோக்கி கூறினார்:) எங்கள் இறைவன் ரஹ்மான் - பேரருளாளன் ஆவான், நீங்கள் (அவனைப் பற்றி தவறாக) வர்ணிப்பதற்கு எதிராக அவனிடம் உதவி தேடப்படுகிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi112. (மேலும் முஹம்மது) கூறினார்: ‘‘என் இறைவனே! (எனக்கும் இந்நிராகரிப்பவர்களுக்கும் இடையில்) நீ நீதமான தீர்ப்பளிப்பாயாக! எங்கள் இறைவன்தான் பேரருளாளன். உங்கள் (பொய்யான) கூற்றுகளுக்கு எதிராக அவனிடமே உதவி தேடுகிறோம்.''