caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 109

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:109

فَإِن تَوَلَّوْا۟ فَقُلْ ءَاذَنتُكُمْ عَلَىٰ سَوَآءٍ وَإِنْ أَدْرِىٓ أَقَرِيبٌ أَم بَعِيدٌ مَّا تُوعَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் விலகிச் சென்றால் நீர் கூறிவிடுவீராக! மிகத் தெளிவாக உங்களுக்கு நான் அறிவித்து விட்டேன், (“நமக்கும் உங்களுக்கும் இடையில் எவ்வித உடன்பாடும் இல்லை என்று”). நீங்கள் வாக்களிக்கப்பட்டது சமீபமாக உள்ளதா அல்லது தூரமாக உள்ளதா என்று நான் அறியமாட்டேன். (என்பதையும் அறிவித்து விடுவீராக!).
Tamil Translation - Omar Sharifஅவர்கள் விலகிச் சென்றால் (அவர்களை நோக்கி) நீர் கூறிவிடுவீராக: மிகத் தெளிவாக உங்களுக்கு நான் (அறிவிக்க வேண்டிய அனைத்தையும்) அறிவித்து விட்டேன். (இதற்கு மேல்) நீங்கள் எதை வாக்களிக்கப்பட்டீர்களோ அது சமீபமாக உள்ளதா அல்லது தூரமாக உள்ளதா என்பதை நான் அறியமாட்டேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi109. (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டாலோ (அவர்களை நோக்கி) ‘‘நான் (என் தூதை) உங்கள் அனைவருக்கும் சமமாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை (வந்தே தீரும். எனினும், அது) சமீபத்தில் இருக்கிறதா தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்'' என்று கூறுவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70