وَأَلْقِ مَا فِى يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوٓا۟ إِنَّمَا صَنَعُوا۟ كَيْدُ سَٰحِرٍ وَلَا يُفْلِحُ ٱلسَّاحِرُ حَيْثُ أَتَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது கையில் உள்ளதை எறிவீராக! அது அவர்கள் செய்ததை விழுங்கி விடும். அவர்கள் செய்ததெல்லாம் ஒரு சூனியக்காரனின் சூழ்ச்சிதான். சூனியக்காரன் எங்கிருந்து வந்தாலும் அவன் வெற்றிபெற மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உமது கையில் உள்ளதை நீர் எறிவீராக! அது அவர்கள் செய்ததை (எல்லாம்) விழுங்கி விடும். அவர்கள் செய்ததெல்லாம் ஒரு சூனியக்காரனின் சூழ்ச்சிதான். இன்னும், சூனியக்காரன் எங்கிருந்து வந்தாலும் (அவன் என்னதான் தந்திரம் செய்தாலும்) வெற்றிபெற மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi69. இன்னும் உமது வலது கையில் இருப்பதை நீர் எறிவீராக! அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரர்களின் (வெறும்) சூழ்ச்சியே (தவிர உண்மையல்ல). சூனியக்காரன் எங்கிருந்து வந்தபோதிலும் வெற்றி பெறவே மாட்டான்'' (என்றும் கூறினோம்).