قَالُوٓا۟ إِنْ هَٰذَٰنِ لَسَٰحِرَٰنِ يُرِيدَانِ أَن يُخْرِجَاكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِمَا وَيَذْهَبَا بِطَرِيقَتِكُمُ ٱلْمُثْلَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இந்த இருவரும் சூனியக்காரர்கள். உங்கள் பூமியிலிருந்து உங்களை (அவ்விருவரும்) தங்கள் சூனியத்தைக் கொண்டு வெளியேற்றுவதற்கும் உங்கள் சிறந்த தலைவர்களை அவ்விருவரும் மிகைத்து விடுவதற்கும் அவ்விருவரும் நாடுகின்றனர்.”
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இந்த இருவரும் சூனியக்காரர்கள்தான். அவ்விருவரும் தங்கள் சூனியத்தினால் உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்றுவதற்கும்; உங்கள் சிறந்த தலைவர்களை அவ்விருவரும் மிகைத்து விடுவதற்கும் நாடுகிறார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi63. அவர்கள் (மக்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தங்கள் சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றி விடவும், உங்கள் மேலான மார்க்கத்தை அழித்து விடவும் விரும்புகிறார்கள்.