caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 47

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:47

فَأْتِيَاهُ فَقُولَآ إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرْسِلْ مَعَنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَلَا تُعَذِّبْهُمْ قَدْ جِئْنَٰكَ بِـَٔايَةٍ مِّن رَّبِّكَ وَٱلسَّلَٰمُ عَلَىٰ مَنِ ٱتَّبَعَ ٱلْهُدَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவனிடம் நீங்கள் இருவரும் வாருங்கள்! (அவனிடம்) கூறுங்கள்! நிச்சயமாக நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். ஆகவே, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பி விடு! அவர்களை வேதனை செய்யாதே! திட்டமாக உனது இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உன்னிடம் நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகுக!
Tamil Translation - Omar Sharifஆக, அவனிடம் நீங்கள் இருவரும் வாருங்கள்! பிறகு, (அவனிடம்) கூறுங்கள்: நிச்சயமாக நாங்கள் உனது இறைவனின் தூதர்கள் ஆவோம். ஆகவே, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பி விடு! அவர்களைத் தண்டிக்காதே! (துன்புறுத்தாதே!) திட்டமாக உனது இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உன்னிடம் நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகுக!
Tamil Translation - Abdulhamid Baqawi47. நீங்கள் இருவரும் அவனிடத்தில் சென்று சொல்லுங்கள்: ‘‘நாங்கள் உன் இறைவனின் தூதர்கள். இஸ்ராயீலின் சந்ததிகளை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களை வேதனை செய்யாதே! மெய்யாகவே நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறோம். நேரான வழியைப் பின்பற்றியவர்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70