caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 135

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:135

قُلْ كُلٌّ مُّتَرَبِّصٌ فَتَرَبَّصُوا۟ فَسَتَعْلَمُونَ مَنْ أَصْحَٰبُ ٱلصِّرَٰطِ ٱلسَّوِىِّ وَمَنِ ٱهْتَدَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! (நீங்கள்) ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பவர்களே! ஆகவே, எதிர்பாருங்கள். நேரான பாதையுடையவர்கள் யார்? நேர்வழி பெற்றவர் யார்? என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! (நீங்கள்) ஒவ்வொருவரும் (உங்கள் முடிவை) எதிர்பார்ப்பவர்களே! ஆகவே, (இப்போதும் உங்கள் முடிவை) எதிர்பாருங்கள். சமமான (நேரான) பாதை உடையவர்கள் யார்? இன்னும், நேர்வழி பெற்றவர்கள் யார் என்பதை (உங்கள் மரணத்தின்போது) நீங்கள் விரைவில் அறிவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi135. (நபியே! நீர்) கூறுவீராக: ‘‘ஒவ்வொருவரும் (தங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே, நீங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்ப்பீராக. நேரான வழியில் இருப்பவர் யார்? (தவறான வழியில் இருப்பவர் யார்?) நேரான வழியை அடைந்து விட்டவர்கள் யார்? என்பதைப் பின்னர் நீங்கள் நிச்சயமாக நன்கறிந்து கொள்வீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70