نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا۟ حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ وَقَدِّمُوا۟ لِأَنفُسِكُمْ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُم مُّلَٰقُوهُ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் மனைவிகள் உங்களுக்கு விளைநிலங்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் நாடியவாறு வாருங்கள். உங்களுக்காக (நன்மை களை) முற்படுத்துங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக்கூடியவர்கள் என்பதையும் அறியுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
Tamil Translation - Omar Sharifஉங்கள் மனைவிகள் உங்களுக்கு விளைநிலங்கள் ஆவார்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் நாடியவாறு வாருங்கள். இன்னும், உங்களுக்காக (நன்மைகளை) முற்படுத்துங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்பதை அறியுங்கள். இன்னும், (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi223. உங்கள் மனைவிகள் உங்கள் விளைநிலங்கள் ஆவர். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று உங்கள் பிற்காலத்திற்கு (வேண்டிய சந்ததிகளை)த் தேடிக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள் என்பதையும் உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். (நபியே! நேர்மையுள்ள) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.